முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் படி, ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வை வரும் 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. +2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் சேர்க்கையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டையும் கடைப்பிடிக்கவும், கைம்பெண்கள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தோரின் பிள்ளைகளுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!

Jayapriya

மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!

Hamsa

பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடம்!

Halley karthi