ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி தயாரித்த Le Musk திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி,  தயாரித்த Le Musk திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது அப்படக்குழுவை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்திய விர்ச்சுவல் ரியாலிட்டி திரில்லரான Le Musk திரைப்படத்தை,  ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து…

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி,  தயாரித்த Le Musk திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது அப்படக்குழுவை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய விர்ச்சுவல் ரியாலிட்டி திரில்லரான Le Musk திரைப்படத்தை,  ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார்.  இப்படத்தில் நோரா அர்னெஸெடர்,  கை பர்னெட்,  முனிரி கிரேஸ் மற்றும் மரியம் ஜோராபியன் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமான Le Musk திரைப்படத்தில் நோரா அர்னெஸெடர்,  கை பர்னெட்,  முனிரி கிரேஸ் மற்றும் மரியம் ஜோராபியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக,  இது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இந்த 37-நிமிடத் திரைப்படம்,  விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் தருவதோடு வாசனையுடன் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

இந்த திரைப்படம் இசைக்கலைஞர் ஜூலியட் மெர்டினியனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கம், தயாரிப்பு மட்டுமின்றி இசையமைப்பையும் கவனித்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச விருது ஒன்று கிடைத்துள்ளது.  இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கலிபோர்னியாவில் நடைபெற்ற இன்ஃபினிட்டி ஃபெஸ்டிவலில் மதிப்புமிக்க விருது Le Musk திரைப்படத்திற்காக பெற்றது மிகுந்த மகிழ்ச்சி.  அன்பான ரசிகர்களுக்கும்,  எனது அர்ப்பணிப்புள்ள குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.