டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடக்கிறது. இந்தப் போட்டி பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக ஆடி வருகின்றன. குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ் அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந் நிலையில் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி, பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. அதிக எதிர்பார்ப்புக்குள்ளான போட்டி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என பேட்டிங்கி அதிரடி காட்டும் வீரர்களும், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று திறமையான பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியை கணிக்க முடியாத அணி என்கிறார்கள். அது எப்போது எகிறும் எப்போது உதிறும் என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த அணியில் கேப்டன் பாபர் அசாம் , விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான் ஆகியோர் சிறந்த ஃபாமில் உள்ளனர். மிடில் ஆர்டரில் முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு கைக்கொடுக்கும். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் தோல்வி அடைந்து வருவதால் இந்த முறையும் அது தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்திய அணி பங்குபெறும் போட்டிகளில், அணியை உற்சாகப்படுத்தும் தீவிர ரசிகரான சுதிர்குமார், இந்தப் போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று உறுதியாக கூறுகிறார். இந்த சுதிர்குமாரை இந்திய கிரிக்கெட் அணி பங்குபெற்ற பல்வேறு போட்டிகளில் பார்த்திருக்க முடியும்.
Dubai | It's a high voltage match. Till now it's a record that we haven't lost against Pak. I am hoping that India will repeat the 2007 win (2007 ki Jeet India Karega repeat). I came here with full enthusiasm to cheer for Indian team: Sudhir, an Indian team supporter #INDvPAK pic.twitter.com/plTpp8T70p
— ANI (@ANI) October 24, 2021
அவர் கூறும்போது, டி2- தொடரில் இன்று நடப்பது ஹைவோல்டேஜ் போட்டி. உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இதுவரை இந்திய அணி தோற்றதில்லை என்ற வரலாறு நம்மிடம் இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்றதை போல இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். முழு உத்வேகத்துடன் இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்காக துபாய் வந்துள்ளேன்’ என்றார்.
I am feeling happy that the #INDvPAK match is happening. From my heart, I pray that Pakistan should win but MS Dhoni is my favourite. I hope that Pakistan will win this time so that Pakistan people can also celebrate: Mohammad Bashir, a Pakistan team supporter pic.twitter.com/wmIcsr5mxk
— ANI (@ANI) October 24, 2021
இதே போல தோனியின் தீவிர ரசிகரான பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது பஷீர் (சாச்சா சிகாகோ) கூறும்போது, இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி எனக்குப் பிடித்த வீரராக இருந்தாலும் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பாகிஸ்தான் மக்களும் கொண்டாடுவதற்காக, இந்த முறை பாகிஸ்தானே வெற்றி பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.