போட்ட காசை எடுத்ததா “டிடி ரிட்டன்ஸ்”.? 4 நாள் வசூல் நிலவரம்!

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 4 நாள் வசூல் தற்போது வெளியாகியுள்ளது.  திகில்-காமெடி திரைக்கதையுடன் மீண்டும் சினிமாவில் கலக்க உள்ளதாக சந்தானம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் ரசிகர்கள் புதிய படத்தின்…

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 4 நாள் வசூல் தற்போது வெளியாகியுள்ளது. 

திகில்-காமெடி திரைக்கதையுடன் மீண்டும் சினிமாவில் கலக்க உள்ளதாக சந்தானம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் ரசிகர்கள் புதிய படத்தின் அப்டேட் குறித்து  எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 2016 மற்றும் 2019 இல் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் 3ஆம் பாகமாக வெளியாகி உள்ளது இந்தப் டிடி ரிட்டர்ன்ஸ் படம். ஆனால் தலைப்பிற்கான ரைட்ஸ் பிரச்சினை காரணமாக டி.டிரிட்டர்ன்ஸ் பெயரில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தில்லுக்கு துட்டு படத்தின் இயக்குனர் ராம் பாலாவின் உதவியாளர் பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சந்தானத்துடன் சுரபி, பெப்சி விஜயன், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனீஸ் காந்த், பழைய ஜோக் தங்கதுரை, மசூம் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 11 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.9 கோடியும் வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து படம் வெளியாகி  நான்கு நாட்களில் 15 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.