“தேரு மேல ஏறிக்கினுதா… நீ ஸ்டாரு போல ஜோரா வரியே” – வெளியானது குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

‘ராயன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51 வது திரைப்படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.
அதில், தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘போய் வா நண்பா’ பாடல் வெளியாகியுள்ளது. விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இந்தத் திரைப்படமானது வரும் ஜூன் மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.