த்ரெட்ஸ் செயலியின் அறிமுகம் ட்விட்டரை பாதித்ததா?

அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்தில் அதிக பயனர்களைப் பெற்ற மெட்டாவின்  த்ரெட்ஸ் செயலி பயன்பாடு தற்போது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ…

அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்தில் அதிக பயனர்களைப் பெற்ற மெட்டாவின்  த்ரெட்ஸ் செயலி பயன்பாடு தற்போது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட ‘த்ரெட்களை’ நாம் பதிவிடலாம்.

த்ரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் 3 கோடி பயனர்களை பெற்றது. அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து நாட்களில் 10 கோடி கணக்குகள் த்ரெட்ஸ் ஆப்பில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் தற்போது 15 கோடி பயனர்கள் த்ரெட்ஸ் ஆப்பில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பிற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் திரெட்ஸ் மிக வேகமாக இவ்வளவு பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது எனலாம்.

ஆனால், த்ரெட்ஸ் ஆப்பின் பயன்பாட்டை பொருத்தவரையில் நாளுக்கு நாள் அது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலியின் நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர்ஸ், கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் த்ரெட்ஸ் ஆப்பின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. செயலி தொடங்கப்பட்ட ஜூலை 6-ம் தேதி ஒப்பிடுகையில் ஜூலை 18ல் திரெட்ஸில் தினசரி பயன்பாட்டு சராசரி நேரம் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை 75%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

அதுபோல முதல் நாளை (ஜூலை 7) ஒப்பிடுகையில் ஜூலை 18-ம் தேதி அதன் பதிவிறக்கமும் 22% குறைந்துள்ளது. இதில்  அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நாடுகள் இந்தியா -28%, அமெரிக்கா-13%, பிரேசில் -13%, மெக்சிகோ -5%, ஜப்பான் – 4%. அதேநேரத்தில் திரெட்ஸ் செயலின் அறிமுகம் ட்விட்டரில் பயன்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவே இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.