Skip to content
January 02, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » did sheikh hasina post pictures of herself having dinner with her daughter amid anti hindu riots whats the truth
முக்கியச் செய்திகள் உலகம் Fact Check Stories

இந்துக்களுக்கு எதிரான கலவரங்களுக்கு மத்தியில் ஷேக் ஹசீனா தனது மகளுடன் உணவருந்தும் படங்களை பதிவிட்டாரா? – உண்மை என்ன?

This news Fact Checked by PTI வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது மகள் சைமா வாஸேத்துடன்…

Author Avatar

Web Editor

December 17, 20246:38 am Bangladeshfake accountriotsSaima wazedSheik Hasina

This news Fact Checked by PTI

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது மகள் சைமா வாஸேத்துடன் உணவருந்திக் கொண்டிருக்கும் புகைப்படம் சமீபத்தில் X இல் பகிரப்பட்டது. இதுகுறித்து உண்மைச் சம்பவத்தை காணலாம்.

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது மகள் சைமா வாஸேத்துடன் உணவருந்திக் கொண்டிருக்கும் புகைப்படம் சமீபத்தில் X இல் பகிரப்பட்டது. PTI Fact Check Desk -ன் விசாரணையில், இது இரு பழைய புகைப்படம் என்றும் போலி கணக்கிலிருந்து பகிரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயரிலான ஒரு எக்ஸ் கணக்கில் டிசம்பர் 3 அன்று தனது மகளும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தெற்காசிய பிராந்திய இயக்குநருமான சைமா வாஸேதுடன் உணவருந்து ஒரு படத்தைப் பகிரப்பட்டுள்ளது. “அம்மாவும் மகளும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம்” என்று அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலர் “உங்கள் நாட்டில், எங்கள் இந்து சகோதர சகோதரிகள் கொல்லப்படுகிறார்கள், எங்கள் கோவில்கள் சூறையாடப்படுகின்றன, எங்கள் சகோதரிகளின் மானம் சூறையாடப்படுகிறது, நீங்கள் இங்கே ஒன்றாக சாப்பிடுகிறீர்கள். தாக்குதல்களை பற்றி பேசுங்கள், சர்வதேச அளவில் பிரச்சினையை எழுப்புங்கள், அதை எங்கள் நாட்டின் பிரதமரிடம் கொண்டு செல்லுங்கள், எங்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பேசுங்கள்” என்று முன்னாள் பிரதமரை விமர்சிக்கும் கமெண்ட்கள் எழுதப்பட்டிருந்தது. சமூக ஊடக பயனர்களில் கருத்து குறித்த  இணைப்பு  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே காணலாம்.

உண்மை சரிபார்ப்பு:

பிடிஐ உண்மை சரிபார்ப்பு டீம் இது குறித்து ஆய்வு செய்ய கூகுள் மூலம் வைரலான படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியது. அதன்படி சைமா வாஸேதின் X இடுகையை தேடியபோது இந்த ஆண்டு ஜூன் 9 அன்று பகிரப்பட்ட ஒரு படத்தை காண முடிந்தது. “பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பதவியேற்பதற்கு முன்னதாக, அம்மாவுடன் சிற்றுண்டி” என்று அவர் அந்த இடுகைக்கு தலைப்பிட்டிருந்தார். 

Saima Wazed பகிர்ந்த இடுகையின் அசல் பதிவின் இணைப்பு , மற்றும் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், அதாவது ஜூன் 9, 2024 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கையையும் நாங்கள் கண்டோம்.  அறிக்கைக்கான இணைப்பு மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது

விசாரணையின் அடுத்த பகுதியில், கூகுளில் பல முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது ஷேக் ஹசீனாவின் உண்மையான அல்லது வெரிஃபைடு செய்யப்பட்ட X கணக்கு எதுவும் கிடைக்கவில்லை.  மேலும் சம்பந்தப்பட்ட கணக்கை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது நவம்பர் 2024 இல் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தது. அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  கணக்கின் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பையும் நாங்கள் கிளிக் செய்தோம், அது டொமைன் கொள்முதல் தொடர்பான போர்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றது. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது: 

இதன் மூலம் ஷேக் ஹசீனா தனது மகளுடன் உணவருந்திக் கொண்டிருக்கும் பழைய புகைப்படம், வங்கதேச முன்னாள் பிரதமரின் போலி கணக்கில் இருந்து சமீபத்தில் பகிரப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

முடிவு:

ஷேக் ஹசீனா தனது மகள் சைமாவுடன் உணவு உண்ணும் புகைப்படம், வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் எனக் கூறி, X கணக்கில் இருந்து சமீபத்தில் பகிரப்பட்டது. விசாரணையில், புகைப்படம் ஒரு போலி கணக்கில் இருந்து தவறான நோக்கத்துடன் பதிவிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தது.

Note : This story was originally published by ‘PTI’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது வேன் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

By Web Editor January 2, 2026

“உட்கட்சி பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது” – ஜோதிமணி எம்.பி!

By Web Editor January 2, 2026

“ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!

By Web Editor January 2, 2026

“ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

By Web Editor January 2, 2026
#ट्रेंडिंग हैशटैग:Bangladeshfake accountriotsSaima wazedSheik Hasina

Post navigation

Previous Previous post: One Nation One Election | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!
Next Next post: ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? – உண்மையில் அந்த படம் யாருடையது?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading