விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம் டிரைலர்!

இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில்…

இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம். இந்த திரைப்படத்தில் நாயகனாக விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் விக்ரம் உடன் முதல் முதலாக கூட்டணி அமைத்தார் கெளதம்.

இந்த திரைப்படம் 2018 ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் ஐந்து ஆண்டுகளாக திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. மேலும் பொருளாதாரக் காரணங்களால் வெளியாவதில் தாமதமானதாக கூறப்பட்டது. சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் படத்தின் இறுதிகட்டப்பணிகள் தொடங்கியதை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உறுதிப்படுத்தினார்.

மேலும் பின்னணி இசை வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. இந்நிலையில் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.