தோனியின் முடிவுகள் எப்போதுமே சரியாக தான் இருக்கும் -அம்பத்தி ராயுடு

தோனியின் முடிவுகள் எப்போதுமே சரியாக தான் இருக்கும்  என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.   நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக இந்திய விக்கெட்…

தோனியின் முடிவுகள் எப்போதுமே சரியாக தான் இருக்கும்  என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.  

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்து மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் நிறைய போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி ஃபினிஷராக இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அப்படி விக்கெட் கீப்பர், ஃபினிஷர் போன்ற பன்முகத்தன்மையை கொண்டிருந்தாலும் தோனியின் கேப்டன்ஷிப் தான் அதிக புகழ் பெற்றதாக இருந்து வருகிறது. ஏனெனில் பொதுவாக மற்றவர்கள் சிந்திப்பதை காட்டிலும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய அவர் களத்தில் பல்வேறு தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளையும் கண்டுள்ளார்.

கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகளை பற்றி இந்திய கிரிக்கெட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.  தற்போது யூடியூப் நேர்காணல் ஒன்றில் அம்பத்தி ராயுடு, “வீரர்களிடம் இருந்து சிறந்தவற்றை வாங்குவதில் தோனி சிறப்பானவர்.

சிஎஸ்கேவுக்காக விளையாடிய பல வெளிநாட்டு வீரர்களிடம் இருந்தும் சிறந்தவற்றை வெளிகொணர்ந்திருக்கிறார். இந்தத் திறமை அவருக்கு தானாக கிடைத்ததா அல்லது இவ்வளவு ஆண்டுகளாக விளையாடியதால் வந்ததா எனத் தெரியவில்லை.

பல நேரங்களில் அவர் இதை ஏன் செய்தார் என நினைப்பேன். ஆனால் பின்னர்தான் அவர் முடிவு சரியானதாக இருந்தது எனத் தெரியும். 99.9 சதவிகிதம் அவர் சரியாக இருந்திருக்கிறார். அதனால்தான் அவரால் இவ்வளவு ஆண்டுகள் வெற்றிகரமாக இருக்க முடிந்தது.

இந்திய கிரிக்கெட்டில் எவரும் அவரது முடிவினை கேள்விக் கேட்க முடியாது” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் 2023இல் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.