டிச. 17 மாநில மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தியாகராய…

ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமராக வேண்டும். அதற்கு திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

மேலும்,  டிச. 17ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாநாடாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

 

அத்துடன் செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன் என்றார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது, திட்டங்கள் நிறைவேற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.