”தோனி அடிச்ச 2 சிக்ஸ் தான் ஜெயிச்சதுக்கு காரணம்….” – சிஎஸ்கே வெற்றி குறித்து ரசிகர்கள் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனி அடித்த 2 சிக்ஸர்கள் தான் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனி அடித்த 2 சிக்ஸர்கள் தான் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

சிஎஸ்கேவின் இந்த வெற்றிக்குப் பின் பேட்டி அளித்த ரசிகர்கள், “இந்த போட்டியில் தோனி அடித்த இரண்டு சிக்சர் தான் சிறப்பானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் சிறப்பாக இருந்து. ஆனால் பந்துவீச்சின் பயிற்சியை தீவிரப்படுத்த வேண்டும். தோனியின் இரண்டு சிக்சர்களைப் பார்க்க சிறப்பாக இருந்தது.

இதையும் படியுங்கள் : ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் – அதிர்ந்துபோன பயனர்கள்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக தோனி இருக்கும் பொழுது, சென்னை அணி தோற்க வாய்ப்பு இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் இன்னும் அதிக ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தோனியின் ஆட்டம் வழக்கம் போல் வெறித்தனமாக இருந்தது.

இரண்டு அணியும் சிறப்பாக தான் விளையாடின. ஆனால், தோனி அடித்த 12 ரன்கள் தான் சென்னை அணி வெற்றி பெற காரணம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. இறுதி நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததுதான் தோனியின் கேப்டன்ஷிப்.

சென்னை அணி வீரர்கள் பின்னால் வரும் அடுத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றனர். ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க தோனியால் மட்டும்தான் முடியும். சென்னை அணி பந்துவீச்சை தீவிரப்படுத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் வெற்றி கோப்பையை தட்டித் தூக்கலாம்” என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.