ட்விட்டரின் லோகோவை நீல நிற பறவையில் இருந்து சீம்ஸ் எனப்படும் நாயாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரியை அதிரடியாக நீக்கினார்.
— Elon Musk (@elonmusk) April 3, 2023
இதையடுத்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். எதற்கும் அசராத எலான் மஸ்க், ட்விட்டரில் பல்வேறு மீம்ஸ் மற்றும் ட்வீட்களை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகிறார். அண்மையில், ட்விட்டரின் புதிய சிஇஓ என்று தனது செல்லப் பிராணியான பிளாக்கி, ட்விட்டர் சிஇஓ இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ட்விட்டரில் புயலைக் கிளப்பும் வகையிலான ஒரு விஷயத்தை எலான் மஸ்க் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ட்விட்டரின் நீல நிறப் பறவை லோகோவை மாற்றி சீம்ஸ் எனப்படும் மீம்ஸ்களில் பயன்படுத்தப்படும் நாயின் படத்தை வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன பயனர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
As promised pic.twitter.com/Jc1TnAqxAV
— Elon Musk (@elonmusk) April 3, 2023
தான் ஏன் ட்விட்டர் லோகோவை மாற்றினேன் என்பதை எலான் மஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ட்விட்டர் லோகோவை ’Doge’ படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த செயல்பாட்டால் ‘Dogecoin’ எனப்படும் க்ரிப்டோகரென்சி நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







