ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்கும் தருமபுரி வனத்துறை ஊழியர்கள் !

தருமபுரி பென்னாகரம் வனத்துறை ஊழியர்கள் ஆடு மேய்பாளர்களிடம் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த…

தருமபுரி பென்னாகரம் வனத்துறை ஊழியர்கள் ஆடு மேய்பாளர்களிடம் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலோடு இணைந்து ஆடு வளர்த்து
தங்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக
வனப்பகுதியில் ஆடு மேய்க்க, பென்னாகரம் வனத்துறை அலுவலர்கள் லஞ்சம்
கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆடி மாதத்தில் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாயும், வருட பிறப்பான
ஜனவரி மாதத்தில் ஆயிரம் ரூபாயும் என கணக்கிட்டு வனத்துறை ஊழியர்கள்
பணம் கேட்பதாகவும், பணம் தர மறுத்தால் அபராதம் விதிப்பதாகவும் வேதனை
தெரிவிக்கின்றனர்.

கோடுபட்டி விவசாயிகள் கூறியதாவது:

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம்.ஆடு, மாடு மேய்ப்பது சுண்டைக்காய் சேகரித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். வனத்துறையினர் காடுகளில் ஆடு மேய்க்க கூடாது, சுண்டக்காய்
பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டி வருகின்றனர்.
அரசு, காடுகளில் விறகு பெருக்கலாம் மற்றும் ஆடு மாடு மேய்க்கலாம் என்று கூறி
வருகிறது. வனவிலங்குகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்தாலும்,
அவர்களுக்கு அது கணக்காக தெரிவதில்லை.

மேலும், வனத்திற்குள் சென்றால் உடனடியாக அபராதம் விதிக்கிறார்கள் என
வேதனை தெரிவித்தார். ஆடி மாதத்தில் ஒரு ஆட்டுக்கு 300 ரூபாய் மாமூல் தர வேண்டும் என்றும், குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் ஜனவரி மாதத்தில் தர வேண்டும். ரேஞ்சருக்கு மோதிரம் வழங்க வேண்டும் என வசூலிக்கின்றனர்.

பணம் தர மறுத்தால், பொய் வழக்குகளை போடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினோம். மனு வழங்கியதால் மாடு ஒன்றுக்கு மூன்று ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தனர். வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தை நாடிவரும் யானை, மயில், பன்னி போன்ற வன விலங்குகளை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் காட்டுக்குள் செல்வதில்லை என வனத்துறைக்கு விவசாயிகள் சவால் விட்டனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.