முன்னணி ஹீரோவை இயக்கும் #Dhanush? வெளியான தகவல்!

நடிகரும், இயக்குநருமான தனுஷ் அடுத்ததாக நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ்…

#Dhanush to direct Munnani Hero? Released information!

நடிகரும், இயக்குநருமான தனுஷ் அடுத்ததாக நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். தனுஷின் 50-வது படமாக உருவாகிய ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது.

தற்போது, தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரப்படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில், தனுஷ் அடுத்ததாக நடிகர் அருண் விஜயை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.