முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை திக்குமுக்காடவைக்கும் தனுஷ்!

தனுஷின் தமிழ் சினிமா பயணத்தில் வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு ரசிகர்களின் ஆரவாரத்துடனும், வெகுஜன மக்களின் கைத்தட்டல்களுடனும் திரையரங்குகளில் பொறி பறக்க மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியை வாரிக்கொடுத்தது அசுரன் தான். இதற்கு முன்பு வடசென்னை படமும் அதற்கு பின்பு கர்ணன் படமும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை கொடுத்திருந்தாலும் அந்த இரண்டு படங்களைப்போல் வெகுசன மக்களின் அமோக வரவேற்பை வாரிக் குவிக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால் 2010 முதல் திரையரங்குகளில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டான தனுஷின் தமிழ் படங்கள் என்றால் மூன்றுதான். அவைகள் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன்.
மேலும் தனுஷின் கடந்த இரு படங்களான ஜகமே தந்திரம் , மாறன் ஆகியவை OTT-யில் வெளியானதுடன் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான வரவேற்பும் பெறவில்லை என்று சொல்வதை விட படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது எனலாம்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த the gray man படம் ஓ.டி.டி-யில் வெளியாகி தனுஷை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் அவரின் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் ஹாலிவுட் சினிமா பிரபலங்களின் கவனத்தை தனுஷ் பெற்றுள்ளதால் அடுத்தடுத்து பல ஹாலிவுட் படங்களிலும் அவர் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசும் போது நெறியாளர், ‘அப்படியே உங்கள் இளம் வயது தனுஷிடம் சென்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த தனுஷ், ‘உன் தோற்றத்தை பற்றி பலரும் இன்று கிண்டல் செய்யலாம், அதைப்பற்றியெல்லாம் கவலை படாதே ஒரு நாள் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரேகூட உன்னை கவர்ச்சியான தமிழ் நண்பரே என்று அழைப்பார்’ என்று கூறுவேன்’ என பதிலளித்தார் தனுஷ். the grey man படத்தில் தனுஷை, ‘hello my sexy tamil friend’என முன்னணி நடிகர் அழைப்பதையே தனுஷ் அவ்வாறு குறிப்பிட்டு கூறினார். அந்த விடியோ இணையம் முழுவது ட்ரெண்ட் ஆகிவருகிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தனுஷின் இந்த பேச்சு மோட்டிவேஷனை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

நாளை மறுதினம் தனுஷின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அடுத்தடுத்த பல அப்டேட்டுகளை வைத்துள்ளார் தனுஷ். அதன் படி, தெலுங்கு இயக்குநரான வெங்கி அதுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் first look நாளையும், அப்படத்தின் டீஸர் நாளை மறுதினமும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் 3வது சிங்கிள் பாடலும் நாளை வெளியாகவுள்ளது. இதையெல்லாம் தாண்டி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் டீஸரும் தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற தகவல் தனுஷ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதெல்லாம் போதாதென்று தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட்டும் தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. பீஸ்ட் மோடில் சென்றுகொண்டிருக்கும் தனுஷ் அடுத்தடுத்த படங்களின் மூலம் பல பளாக் பஸ்டரை கொடுக்கப்போகிறார் எனுவும் இது தனுஷின் 3.0 ஆட்டமாக இருக்கப்போகிறது எனவும் கூறூகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

Halley Karthik

ஊரடங்கால் கிண்டி பாம்பு பண்ணை மூடப்படுகிறதா?

இபிஎஸ், ஓபிஎஸை தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

Web Editor