‘D50’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதியை அறிவித்த தனுஷ்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக…

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘D50’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அன்று படத்தின் தலைப்பும் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் பவர்பாண்டி. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘D50’ தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.