திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கை ரூ.111.65 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கையாக 111.65 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கையாக 111.65 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டும். இந்த கோயில் உண்டியல் வருமானமும் அதிகம். வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. பல பக்தர்கள் தங்கள் கடைசி காலத்தில் தங்கள் சொத்துகளை திருப்பதி கோயிலுக்கு உயிலாக எழுதி வைத்து விடுகிறார்கள். அதனால் அவற்றின் மதிப்பு முழுவதுமாக தெரியாது.

இந்த கோயிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு, புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், ஏழுமலையானைக் கடந்த செப்டம்பர் மாதம் 21 லட்சத்து ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் 111 கோடியே 65 லட்சம் ரூபாயைக் காணிக்கையாகச் சமர்ப்பித்து இருந்தனர்.

கடந்த மாதம் ஏழுமலையானுக்கு மொட்டை போட்டு தலை முடி சமர்ப்பித்த பக்தர்ளின்
எண்ணிக்கை 8 லட்சத்து 94 ஆயிரம். விற்பனையான லட்டுக்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சம். 2023 துவக்க முதல் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையைப் பக்தர்கள் ஏழுமலையானுக்குக் காணிக்கையாகக் கோவில் உண்டியலில் சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.