வங்கதேசத்தில் பேரழிவை ஏற்படுத்திய டெங்கு; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்…

வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழியும் அளவுக்கு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழியும் அளவுக்கு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டாக்கா உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகள் டெங்கு மற்றும் டெங்கு அறிகுறிகளுடன் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. வங்கதேசத்தில் பெய்து வரும் மழைக்கு பிறகு தண்ணீர் தேங்கியுள்ளதால், டெங்குவை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் இதுவரை 54,416 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.

வங்கதேச சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2584 வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2584 நோயாளிகளில், 1131 நோயாளிகள் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.