முக்கியச் செய்திகள் தமிழகம்

நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு- முதலமைச்சர்

நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் கூறினார். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூபாய் 33 கோடி 56 இலட்சத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கும் ஊட்டிவிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு. காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது. பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? சோனியாவிடம் அறிக்கை தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு!

G SaravanaKumar

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

G SaravanaKumar