டென்மார்க் ஓபன் சா்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அவர், 21-19, 21-12 என்ற கேம்களில், உலகின் 19-ஆம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கை சாய்த்தார். இந்த ஆட்டத்தை 47 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார் சிந்து. முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இதே சுபானிடாவிடம் தான் இந்தியாவின் ஆகா்ஷி காஷ்யப் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிந்து தனது அரையிறுதியில், 3 முறை உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறாா். இதற்கு முன் மரினை 15 முறை சந்தித்துள்ள சிந்து, அதில் 5-இல் மட்டுமே வென்றிருக்கிறாா். அதிலும் கடைசியாக அவரை எதிா்கொண்ட 4 ஆட்டங்களிலும் சிந்துவுக்கு வெற்றி வசமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5️⃣th semifinal for Sindhu on #BWFWorldTour this year and she marches into it with an outstanding win 💥🔝
📸: @badmintonphoto #DenmarkOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/i3iKN5CWhm
— BAI Media (@BAI_Media) October 20, 2023







