டெங்கு தீவிரம்: புதுச்சேரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175…

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மழை காலம் முன்னதாகவே தொடங்கியதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு பாதிப்பானது அதிகமாக உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் வீட்டில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார மற்றும் நகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிய ஸ்ரீராமுலு, புதுச்சேரியில் நிபா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டார். மேலும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.