அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை!

காது கேளாதோருக்கான தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த குமரி தடகள வீராங்கனை சமீஹா பர்வினின் தாய் சலாமத் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

காது கேளாதோருக்கான தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த குமரி தடகள வீராங்கனை சமீஹா பர்வினின் தாய் சலாமத் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பகுதியைச் சேர்ந்தவர் சமீஹா பர்வீன். இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காதுகேளாதோருக்கான தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். வறுமையான குடும்ப பின்னணியிலும் தனது திறமையை வெளிக் கொண்டுவர சமீஹா பர்வின் விடாமுயற்சி எடுத்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு கோழிக்கோட்டில் நடந்த போட்டியில் 100 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்றார்.

போலந்து நாட்டில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 7வது இடமும் பெற்றார். இந்நிலையில், மத்தியபிரதேசம்  இந்தூரில் நடைபெற்ற தேசிய காதுகேளாதோர் சீனியர் தடகள போட்டியில் சமீஹா கலந்துகொண் டார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடத்தைபிடித்துதங்கம் வென்று புதிய தேசிய சாதனைகளை படைத்தார். ஏற்கனவே இவர் நீளம் தாண்டுதலில் உலக போட்டியில் 5மீ தாண்டிய நிலையில், தற்போதைய போட்டியில் 5.21 மீ தாண்டி சாதனை படைத்தார்.

இதையும் படிக்க: யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு

இது தேசிய அளவில் புது சாதனையாகும். உயரம் தாண்டுதலிலும் சமீஹா அதிக உயரம் தாண்டி தேசிய அளவில் புதிய சாதனை படைத்தார். ஓட்ட போட்டியிலும் வெற்றி பெற்றார். கிராம பகுதியிலிருந்து தடைகளை தகர்த்து சாதனைகளை பெற்று வரும் வீராங்கனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீஹாவின் தாயார் சலாமத் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த
பேட்டியில், மாற்றுத் திறனாளிகளின் குறையை சுட்டிக்காட்டக் கூடாது என்பதற்காக அனைத்து குறைபாடுகள் உடையோரை இனி மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். அதே வேளையில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாற்று திறனாளிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் அவர்களுக்கு பயிற்சி வழங்குவதே இந்த காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ள நிலையில், அரசு வேலைகளிலும் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.