டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து ஆங்கில தொலைகாட்சி…

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இது குறித்து ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“இப்போதைக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய கொரோனா வகை அல்ல. அதன் தொற்று எண்ணிக்கை இன்னும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சில நாடுகள் கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்டில் கோவிஷீல்டுக்கு தடை விதிப்பது எந்த வித தர்க்கத்துக்கும் உரியதல்ல. பெருந்தொற்று காலகட்டத்தின் போது தடையில்லாத பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

கோவிஷீல்டை தடுப்பூசி பாஸ்போர்ட்டில் சேர்க்க ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ அமைப்புகளிடம் உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும். கோவேக்சினுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் முடிவு எடுக்கப்படும்.” இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.