“ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி” – விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்..!

 “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில்  பேட்டியளித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்…

 “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில்  பேட்டியளித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை  பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், விழாவிற்கு செல்ல அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்தி புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.