அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

தேசிய தலைநகர் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரவிந்த் கெஜிரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை கடந்துள்ள நிலையில் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை…

தேசிய தலைநகர் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரவிந்த் கெஜிரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை கடந்துள்ள நிலையில் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,968 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியை பொறுத்த அளவில் இதுவரை 6,98,005 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் டெல்லி முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்ட சில வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டெல்லியை பொறுத்த அளவில் இதுவரை கொரோனா தொற்றால் 11,157 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.