துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 50வது ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 43 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருந்தார். ராபின் உத்தப்பா 19 ரன்களையும், கெய்க்வாட் 13 ரன்களையும், தோனி 18 ரன்களையும் எடுத்திருந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்காளாக களமிறங்கிய பிரித்வி ஷா 18 ரன்களும், ஷிகர் தவான் 39 ரன்களையும் குவித்திருந்தனர்.
இவர்களையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 15 ரன்களும், ரிபால் படேல் 18 ரன்களையும் குவித்தனர். இவர்களையடுத்து களமிறங்கிய அஸ்வின் 2 ரன்களில் அவுட் ஆக, ஷிம்ரான் ஹெட்மியர் 28 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.
இறுதியாக 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி சென்னையை முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.