உதயநிதி ஸ்டாலின் மீது மானநஷ்ட வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி…

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசியதாக உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply