20 ரூபாய் டோக்கனை நம்பி மறுபடியும் ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் 43வது வட்டத்தில் உள்ள புதிய மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை 5 கிலோ படத்தொகுப்பினை வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர் எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார்
பின்னர் மேடையில் பேசிய கோகுல இந்திரா தற்போது செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய புரட்சித்தலைவி அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் 2015ஆம் ஆண்டு மழை வெள்ள காலங்களில் ஆர்.கே நகரில் சூழ்ந்த மழைநீரை அகற்ற அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள் என அனைவரும் முகாமிட்டு பணியை சிறப்பாக செய்து ஆர்.கே நகர் சொர்க்க பூமியாக மாற்றியதாக தெரிவித்தார். ஜெயலலிதா இக்கட்டான சூழலில் இருந்தபோது பிரச்சாரம் மேற்கொண்டபோது வாக்களித்து வெற்றிபெற செய்தவர்கள் ஆர்கே நகர் மக்கள் மீண்டும் வந்த வாய்ப்பை ஆர்கே நகர் மக்கள் தர வேண்டும்.
ஆர். கே நகரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வெற்றி பெற்றிருந்தால் அம்மா செய்ததை விட அதிகமாக வேட்பாளராக நின்ற மதுசூதனன் தொகுதி மக்களுக்காக செய்திருப்பார்.மீண்டும் நாம் ஏமாறக்கூடாது இரவோடு இரவாக டோக்கன் கொடுத்து ஏமாற்றி பொய்யான பிரச்சாரம் கொடுத்து வீணாக போனதெல்லாம் போதும் இனியும் ஏமாற கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.







