முகமது நபி குறித்த அவதூறு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!

முகமது நபி குறித்த அவதூறாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜா சிங்  மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு வருகிற தெலங்கானா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக…

முகமது நபி குறித்த அவதூறாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜா சிங்  மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு வருகிற தெலங்கானா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாம் மதத்தின் இறைதூதரான முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஸ்டான்அப் காமெடியான உள்ள முனவ்வர் ஃபரூக்கிக்கு எதிராக மத துவேச கருத்துக்களை பரப்பினார்.

இதனைத் தொடர்ந்து டி ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட டி.ராஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் டி.ராஜாவிற்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில்  ராஜா சிங் எம்எல்ஏ மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஜக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராஜா சிங் எம்எல்ஏ  சம்பவம் குறித்து கட்சியின் மத்திய ஒழுங்கு குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளித்ததை ஆராய்ந்ததில் குழுவானது உங்களது இடைநீக்கத்தை ரத்து செய்கின்றது”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு வருகிற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.