குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளேன் – மன்சூர் அலிகான்!

குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், அரசியலிலும் ஈடுபட்டு…

குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் லியோ படம் குறித்து இவர் பேசியபோது த்ரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமீபத்தில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையும் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் த்ரிஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பிரச்சினை முடிந்ததா என்று பார்த்தால் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி  நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர் உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ள அவர், அரசியல் குறித்தும், சினிமா குறித்தும் மட்டுமே தான் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியதாகவும், ஆனால் திரிஷா குறித்து மட்டும் பேசிய வீடியோவை எடிட் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகள் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய நபர்கள் மீது மான நஷ்ட வழக்கு மற்றும் பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.