முக்கியச் செய்திகள்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை தீவிபத்து; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 22ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை ஒன்பது பேர்
உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
கஜேந்திரன் (50), ஜெகதீசன் (35) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

90 மற்றும் 100% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட கஜேந்திரன் மற்றும் ஜெகதீசன்
ஆகிய தீவிர சிகிச்சை பிரிவு தீவிர கண்காணிப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து
வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சம்பவத்தன்று அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிதி உதவி அளித்திருந்தார்.  தீ விபத்தில் ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

Janani

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நீந்தி சாதனை படைத்த வீராங்கனை

G SaravanaKumar