அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. காட்டு தீக்கு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
1300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்பல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் வேகம காரணமாக காட்டு தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1918-ஆம் ஆண்டு வடக்கு மின்னேசோட்டா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 104 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது மாவி தீவில் மிக மோசமான காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







