‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட்’ லெவல் படத்தின் முதல் பாடலான ‘கிஸ்சா 47’ லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகை தனது காமெடியால் கலக்கி வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. இப்படம் மக்களிடயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆஃப்ரோ இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கிஸ்சா 47’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது . பக்திப் பாடலுடன் பியூஷனாக உருவாகியுள்ள இந்த பாடல் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இப்படம் மே 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

https://www.youtube.com/watch?v=I-E1S5XlEAY&t=21s

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.