பக்ரீத் திருநாளை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும்
ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து இங்கு இயற்கையில் அழகை
கண்டு ரசிப்பது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை திருநாள் மற்றும் ஞாயிறு விடுமுறையை ஒட்டி உதகை
அரசு தாவரவியல் பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் அமைந்துள்ள இந்திய
வரைபடம் மற்றும் செல்ஃபி ஸ்பாட்டுகளில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில் சமவெளி பகுதிகளில்
வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில் உதகையில் சாரல் மலையுடன் நிலவும்
குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்வதாக பெங்களூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா
பயணிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள
நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
என அறிவுறுத்தப்பட்ட நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த
சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் இருந்ததால் நோய் தொற்ற பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.