ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தின் ‘டவுளத்தான ரவுடி’ என்ற பாடல் நாளை பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கேப்டன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
https://twitter.com/arya_offl/status/1646165158937370626?s=20
இப்படத்தின் ‘டவுளத்தான ரவுடி’ என்ற பாடல் நாளை பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.







