தேனீக்கள் என்றால் அதிர்ஷ்டம்; காரில் தேன் கூட்டோடு ஊர் சுற்றும் நபர்!

சீனாவில் காரில் தேன் கூடோடு ஊர் சுற்றும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில், மக்கள் தேனீக்களை பெரும்பாலும் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் உற்பத்தித்திறனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். இயற்கையிலேயே தேனீக்களின்…

சீனாவில் காரில் தேன் கூடோடு ஊர் சுற்றும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில், மக்கள் தேனீக்களை பெரும்பாலும் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் உற்பத்தித்திறனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். இயற்கையிலேயே தேனீக்களின் நடத்தை அயராத உழைப்பு மற்றும் தேன் தயாரிக்கப் பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும் திறனுக்காக உலகெங்கும் போற்றப்படுகிறது. சீனாவிலும் தேனீக்கள் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

அதன் படி ‘யாவ்’ எனப்படும் சீனர் ஒருவர் தனது காரில் கூட்டமாக வசிக்கும் தேனிகளை அழிப்பதற்குப் பதிலாக, அவற்றோடு சுற்றித் திரிந்து வருகிறார். தேனீக்கள் அவரது காரில் எப்படி நுழைந்தன அல்லது பொருத்தமான கூடுகளுக்கு ஏன் காரை அவை தேர்ந்தெடுத்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சீன கலாச்சாரத்தில், தேனீக்கள் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாக கருதப்படுகின்றன. அனைவரும் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளாகவும், தேனீக்கள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளம் என்று நம்புகிறார்கள்.

யாவோவின் வாகனத்தில் பயணித்த ஒருவரால் முதலில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பலர் அந்தக் காட்சிகள் போலியானது எனக் கூறிய நிலையில், அவர்களின் கூற்றுக்களை மறுத்தார் யாவ். மேலும் இவர் குறித்த வீடியோக்கல் இணையத்தில் பரவவே பூச்சிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இவை போலி அல்ல உன்மையானது எனத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.