19 வயதில் உயிரிழந்த “தங்கல்” திரைப்பட குழந்தை நட்சத்திரம்!

அமிர்கானின் தங்கல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நகர் உடல்நலக் குறைவால் இன்று (பிப்.17) உயிரிழந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான், சாக்ஷி தன்வார், பாத்திமா…

அமிர்கானின் தங்கல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நகர் உடல்நலக் குறைவால் இன்று (பிப்.17) உயிரிழந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான், சாக்ஷி தன்வார், பாத்திமா சனா ஷைக் என பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தங்கல்.  இந்தியாவில் 4300 திரையரங்குகளிலும்,  வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளிலும் தங்கல் வெளியானது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான தங்கல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இப்படம் பல விருதுகளையும் குவித்தது.

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த 19 வயதான சுஹானி பட்நகர் ( அமீர்கான் மகள் பபிதா போகட்) உடல்நலக்குறைவால் இன்று காலை இறந்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு இவர் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.  ஹரியாணாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.  மேலும், இதற்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.