தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமனம்!

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும்…

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990 தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடா்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரனை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ராஜீந்தா் கண்ணா தேசிய பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.