மேற்கு வங்காளத்தில் இன்று “மோக்கா” புயல் கரையை கடக்கவுள்ளதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்ற மோக்கா புயல் இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மோக்கா’ புயல், அதிதீவிர புயலாக உருமாறி உள்ளதால், மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடம் மீட்பு படையின் எட்டு குழுக்கள், 200க்கும் மேற்பட்ட வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில், கடலோர காவல் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்., ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.







