சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன் குவித்தது.
183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. பிரேரக் மன்கட் நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால், லக்னோ அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் மீண்டும் 4வது இடத்துக்கு முன்னேறியது.







