நீலகிரி மாவட்டம், கூடலூர் காவல் நிலையத்தின் தடுப்பு சுவர் மீது
ஏறி, காவல் நிலையத்திற்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகர காவல் நிலையத்தில் இன்று அதிகாலை சுமார்
2.30 மணி அளவில், கரடி ஒன்று காவல் நிலையத்தின் தடுப்பு சுவரை தாண்டி
காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. கரடி காவல் நிலையத்திற்குள் நுழைவதை
நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர், தனது செல்போனில் வீடியோ எடுத்ததுடன்
காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு தகவல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரவு பணியில் இருந்த காவலர்கள் சத்தம் எழுப்பி காவல்
நிலையத்திற்குள் நுழைந்த கரடி விரட்டினர். தொடர்ந்து, அந்த கரடி அருகே
உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு
வந்த கரடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கு. பாலமுருகன்







