மேலும், பாலிவுட் பிரபலங்களான அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோரது கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.








