கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தி? விளக்கிய ஒலோங்கா!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்கா தெரிவித்துள்ளார். சர்வதேச நட்சத்திர பந்து வீச்சாளரும், ஜிம்பாப்வே கிரிக்கெட்…

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நட்சத்திர பந்து வீச்சாளரும், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் நேற்று இரவு மரணமடைந்ததாக செய்தி வெளியானது. ஆல் ரவுண்டரான ஹீத் ஸ்ட்ரீக், 1990 – 2005 இடைப்பட்ட கால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தார்.

அவர் நேரடி களத்திலிருந்து விடைபெற்ற போதும் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும், பின்னர் வங்கதேசத்தின் சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் கிரிக்கெட் உலகில் தொடர்ந்திருக்கிறார். ஐபிஎல் பங்களிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.

கிரிக்கெட் பயிற்சியாளராக அவரது பந்துவீச்சு அனுபவத்தை கற்றுக்கொள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் காத்திருந்த சூழலில், 49 வயதில் அவரை முடக்கிய புற்றுநோய் காரணமாக தென்னாப்பிரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், புற்று நோய் முற்றிய நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக செய்தி வெளியானது. இதனைதொடர்ந்து முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் ஹீத்தின் நண்பருமான ஹென்றி ஒலோங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.

https://twitter.com/henryolonga/status/1694212344732357101?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694212344732357101%7Ctwgr%5E2d6b475ce4d70649f8a574d2d21b8699d4c01707%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2023%2Faug%2F23%2Fcricketer-heath-streak-is-healthy-4060166.html

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தனது பழைய ட்வீட்டை நீக்கிய ஹென்றி, ஹீத் நலமுடம் இருப்பதாக பதிவிட்டு அவருடன் வாட்ஸ்அப்பில் உரையாடிய ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். அந்த வாட்ஸ்அப் உரையாடலில், “நான் மிகவும் நலமாக இருக்கிறேன். ரன்அவுட்டை உடனடியாக திரும்பப் பெறுங்கள் நண்பா.” என்று ஹீத் விளையாட்டாக தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.