கிரிக்கெட் சூதாட்ட புகார் : இலங்கை வீரர் சேனநாயக கைது!

கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சேனராயகாவை போலீசார் கைது செய்தனர்.  கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ப்ரீமியா் லீக் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் சேனராயக கிரிக்கெட்…

கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சேனராயகாவை போலீசார் கைது செய்தனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ப்ரீமியா் லீக் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் சேனராயக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சேனராயக வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சேனராயகாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.  அவரிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.