பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும்…

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தடுப்பூசிக்கு தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த வயது வரம்பில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 12,08,329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 25,14,39,598 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.