டெல்டா வேரியன்ட்க்கு எதிராக 65.2% வீரியமாக செயல்படும் கோவாக்சின்

கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின்…

கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. இதன்படி கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல டெல்லா வேரியன்ட் வைரசுக்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதேபோல கொரோன தொற்று அறிகுறிகளுக்கு எதிராக 93.4 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 25 நகரங்களில், 130 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளிவந்துள்ளது. கோவாக்சின் 2ம் தவணை செலுத்தி 2 வாரங்களுக்கு பின்னர் இந்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடக் நிறுவனமானது ஐசிஎம்ஆர் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.