கோவை அருகே, கிடங்கில் பதுங்கி, வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த சிறுத்தை 5 நாட்களுக்குப் பிறகு கூண்டில் சிக்கியுள்ளது.
கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த கிடங்கில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கிடங்கை சுற்றிவளைத்த போலீசார் மற்றும் வனத்துறையினர், அதனை வெளியேறாமல் தடுக்கும் நோக்கில் வாயில்களில் வலைகளை கட்டினர். மேலும் கிடங்கின் இரண்டு வாயில்களிலும் வைக்கப்பட்ட கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், 5 நாட்களுக்கும் மேலாக, கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்குகாட்டி வந்தது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி காயமடைய வாய்ப்புள்ளதால், அதனை கூண்டு மூலம் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு, சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. காயமடைந்த நிலையில் உள்ள அந்த சிறுத்தைக்கு, சிசிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.