கனமழை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் மேக மூட்டங்களுடன் மெல்லிய சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலம் பகுதிகளில் ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.