பருத்தி விற்பனைக்காக 1 கி.மீ. காத்திருந்த பருத்தி விவசாயிகள்!

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய பல மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கிலோ மீட்டர் துாரம் விவசாயிகள் காத்திருந்தனர். கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மறைமுக…

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய பல மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கிலோ மீட்டர் துாரம் விவசாயிகள் காத்திருந்தனர்.
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படும்.  பருத்தி அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் இதன் தேவை கணிசமாக குறைந்துள்ளது.  இந்நிலையில் ஒன்றிய அரசு பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவின்டால் ஒன்றுக்கு 6380 ரூபாயும், குறைந்தபட்சமாக 6080 ரூபாயும் விலை நிர்ணயம் செய்தது.
இந்த விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற உள்ள ஏலத்திற்கு இன்றே ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கும் மேலாக தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்வதற்காக லாரிகளில் காத்திருந்தனர்.  இதனால் கும்பகோணம் முதல் சுவாமிமலை சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.