சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் 7 அலுவலகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 81வார்டு கவுன்சிலர் மருத்துவர் சாந்தகுமாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தப்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக வேலைநீக்க நடவடிக்கையில் ஈடுபடும் கவுன்சிலர் சாந்தகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டல அலுவலர் செயற் பொறியாளர் தலைமையில் ஆர்ப்பாட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்







